2027 இற்கு பின்னரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்வதற்குரிய முயற்சி எடுக்கப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் ,
” இலங்கையின் ஏற்றுமதியில் 23 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கே அனுப்படுகின்றது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்குரிய இணக்கப்பாடு 2027 இல் நிறைவுபெறுகின்றது. இலங்கையின் பொருளாதாரம் ஸ்தீரமடையாமல் குறித்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாதுபோனால் அது எமது நாட்டு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, 2027 இற்கு பின்னரும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தக்க வைத்தக்கொள்வதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. சில விடயங்கள் தொடர்பில் நாம் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.” – என்று குறிப்பிட்டார்.
இந்நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். ஒன்லைன் சட்டமூலம் மறுசீரமைக்கப்படும். மூடிமறைக்கப்பட்ட கொலைகள் தொடர்பில் விசாரணை வேண்டும் எனக் கோரப்பட்டள்ளது. அது தொடர்பில் நாமும் உறுதியாக உள்ளோம்.
நாட்டில் ஜனநாயம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுத்துள்ளோம்.” – எனவும் ஜனாதிபதி கூறினார்.