பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அத்தியவசிய தேவைகள் இன்றி வெளியில் வர வேண்டாம்.

0
172

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளவர்கள் அத்தியவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டுடாம் என லிந்துலை பிரதேச பொது வைத்திய அதிகாரியும்,அரச மருத்துவ அதிகாரியின் சங்கத்தின் நுவரெலியா கிளையின் தலைவருமான ஆறுமுகன் ஜெயராஜன் தெரிவித்தார்.
நாளைத்தளர்த்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று (20) திகதி கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்ககளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த தொற்று பரவலினை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களின் ஒத்துழைப்பு இன்றியடையாதது ஆகவே நாளை பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் வழமை போல் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தால் தொற்று பரவலினை கட்டுப்படுத்த முடியாது போய்விடும் இதனால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும் ஆகவே அத்தியவசிய தேவைகளுக்காக நகரங்களுக்கு வருகை தருவதாக இருந்தால் வீட்டிலிலருந்து ஒருவர் மாத்தி;ரம் வர வேண்டும் அதுவும் முகக்கவசம் அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும்.

இதன் போது தமது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நகருக்கோ பயணமோ செல்லக்கூடாது ஆபத்து இன்னமும் எம்மை விட்டு அகலவில்லை. ஆகவே நீங்கள் வெளியில் போய் வந்த பின் நன்றாக குளித்து விட்டு உரிய சுகாதார பொறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இவர் மேலும் தெரிவித்தார்.

 

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here