சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இதன்படி, நேற்றைய நான்காவது நாள் ஆட்டநேர நிறைவின் போது, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 387 என்ற சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தன.
இதற்கமைய குறித்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 135 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.