பரிதாபகரமான நிலையில் சடலமாக மீட்கபட்ட 17வயது சிறுவன்- பொகவந்தலாவையில் சம்பவம்!!

0
271

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டபகுதியில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து 17வயது
சிறுவன் ஒருவன் பரிதாபகரமான நிலையில் 30.10.2018.செவ்வாய்கிழமை மாலை
05.30மணி அளவில் சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்
தெரிவித்தனர்.

குறித்த ஆற்றின் பகுதியில் விவசாய தோட்டத்திற்கு வரிச்சி வகைகளை வெட்டுவதற்காக சென்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

ஆற்று பகுதிக்கு சென்ற சிறுவனை காணவில்லை என தோட்ட பொதுமக்களும்
உறவினர்களும் நீண்ட நேரமாக காணவில்லை என தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு
கொண்டிருந்த நிலையில் நீண்ட லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள
ஆற்றில் சடலமாக கிடந்ததை இனங்கண்ட பொதுமக்கள் உடனடியாக பொகவந்தலாவ
பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தாக தெரிவிக்கபடுகிறது.

DSC06309 DSC06287 DSC06286 20180519_082355

தகவல் அறிந்த பொகவந்தலாவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை
மீட்டு பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு சடலம்
வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் சடலமாக மீட்கபட்ட
இளைஞர் 17வயதுடைய ராத கிருஸ்சாந்தன் எனவும் அடையாளம் கணபட்டுள்ளதாகவும்
குறித்த சிறுவனின் தாய் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும்
தனது தந்தையின் பாராமரிப்பில் இந்த சிறுவன் வளர்ந்து வந்ததாகவும்
பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் தடைவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்டு இது
கொலையா அல்லது தவறிவிழுந்ததில் குறித்த சிறுவன் உயிர் இழந்தாரா என்ற
சந்தேகம் பொலிஸாருக்கு எழுந்துள்ள நிலையில் தீவிரமாக விசாரனைகளை பொலிஸார்
ஆரம்பித்துள்ளனர்

சிறுவனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம்
31.10.2018.புதன்கிழமை நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக
தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ  நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here