பரிமாற்ற ஆதாய இழப்பு தொடர்பில் விளக்கம் அளித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

0
47

அந்நியச் செலாவணி ஆதாயங்களில் ஏற்பட்ட தெளிவான வீழ்ச்சியே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் பரிமாற்ற ஆதாய இழப்புக்கு காரணமாக அமைந்ததாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

உண்மையான இழப்பு கடந்த நிதியாண்டை விடக் குறைவு எனவும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

2024/25 நிதி அறிக்கைகள்கள் குறித்த ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளது.

2023/24 ஆம் ஆண்டில் 7,925 மில்லியன் ரூபாய் இலாபத்துடன் ஒப்பிடும்போது, ​​2024/25 நிதியாண்டில் குழுமத்தின் இழப்பு 2,735 மில்லியன் ரூபாய் என விமான நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில் இந்த இழப்புக்கு காரணத்தை தெளிவுபடுத்தும் வகையில், இந்த ஆண்டு ரூ. 3,925 மில்லியன் குறைவான பரிமாற்ற ஆதாயமே இதற்குக் காரணம் எனவும் இது கடந்த ஆண்டு 26,717 மில்லியன் ரூபாவாக இருந்ததாகவும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு நாணயத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடன்களை மறுமதிப்பீடு செய்வதன் மூலம் பரிமாற்ற ஆதாயம் கணக்கிடப்படுகிறது. அங்கு மதிப்பு அதிகரிக்கும் ரூபாய் கணக்கியல் ஆதாயத்தை உருவாக்குகிறது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கியுள்ளது.

நாணய விளைவைத் தவிர்த்து, குழுமம் 2024/25 ஆம் ஆண்டில் ரூ. 6,660 மில்லியன் இழப்பைப் பதிவு செய்துள்ளது.

அது கடந்த 2023/24 ஆம் ஆண்டின் 18,792 மில்லியன் இழப்புடன் ஒப்பிடுகையில் முன்னேற்றகரமானது என விமான நிறுவனம் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here