பலத்த பாதுகாப்புடன் நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குபெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!!

0
146

பலத்த பாதுகாப்புடன் நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குபெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன

10.02.2018 அன்று நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குபெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து, வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Image may contain: one or more people and outdoor

Image may contain: one or more people and people standingImage may contain: 2 people, people standingImage may contain: 2 people, people sitting and outdoor

நுவரெலியா மாவட்டத்தில் 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 562025 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை லிந்துலை மற்றும், அட்டன் டிக்கோயா ஆகிய நகர சபைகளுக்கும், வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட கொட்டகலை, அக்கரபத்தனை, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்குமான 504 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும் 490 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 7479 பேர் கடமையாற்றவுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1572 பேர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

(க.கிஷாந்தன், டி சந்ரு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here