பலாங்கொடை மண்சரிவு – காணாமல் போயுள்ள நால்வரை மீட்கும் பணி ஆரம்பம்

0
184

பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாகவும், பொலிஸார், இராணுவத்தினர், பொது மக்கள் ஆகியோர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) மாலை பெய்த மழையுடன் கூடிய இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடு ஒன்றில் இருந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தற்போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இவர்கள் மண் மேட்டின் கீழ் புதையுண்டுள்ளார்களா அல்லது மண்சரிவுடன் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்களா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாகவும், கடும் மழை காரணமாக அப்பகுதிக்கு செல்வது சிரமமாக இருந்ததால், அவர்கள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான பிரதேசம் என்பதுடன் மேலும் பல வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்ற பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here