புதிய கல்வி வருடத்திற்காக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையங்கள் ஊடாக தமது விண்ணப்பத்தினை அனுப்ப முடியும் என பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டமானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதுவரை இணையங்கள் ஊடாக 25,000இற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும், கடந்த வருடமே இந்த செயல்பாடு ஆரம்பிக்கபட்டதாகவும்,அடுத்த வருடம் முதல் இணையங்களில் மட்டுமே விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.