பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டின்சின் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

0
180

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொகவந்தலா டின்சின் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று (02) மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டகார்கள் தொழிலாயின் வயிற்றில் அடிக்காதே, டிஜிட்டல் தராசு வேண்டும்,முகாமையாளரை இடம் மாற்றம் செய்ய  வேண்டும் ;போன்ற வாசகங்களை எழுதிய சுலோக அட்டகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்ட காரர்கள் கருத்து தெரிவிக்கையில் தோட்ட நிர்வாகம் ஒவ்வருவருக்கு  ஒவ்வொருமாதிரி தேயிலை கொழுந்தினை நிறுக்கின்றனர் 20 கிலோவுக்கு ஐந்து கிலோ கமிசனாக கழிக்கின்றனர். 17 கிலோ எடுத்தாலும் அரைநாள் பேர் தான் போடப்படுகின்றன. இந்த முகாமையாளரை நம்பிதான் நாங்கள் 20 கிலோ பறித்தோம் இவர் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கிறார் ஆகவே இந்த முகாமையாளரை இடம் மாற்றம் செய்து விட்டு நல்ல ஒரு முகாமையாளரை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில். தோட்ட முகாமையாளர் தன் வீட்டில் வளர்க்கும் நாய் தொழிலாளர்களை விட சொற்படி நடப்பதாகவும் தெரிவிக்கிறார் அப்படியென்றால் தொழிலாளர்களை நாயாகவா மதிக்கிறார்.கங்காணி மார்கள் செல்லிடப்பேசிக்கு மீள்நிரப்பு செய்து கொண்டு கொழுந்தினை அதிகரித்து காட்டுவதாக தெரிவிக்கிறார் கொழுந்து இருக்கும் காலங்களில் ஐந்து ஆறு கிலோ கமிசனாக கழிக்க வேண்டும் என்கிறார் ஆகவே இவரது நிர்வாகம் தொழிலாளர்களை மிகவும் துன்பப்படுத்துகிறது ஆகவே இவரை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

மலைவாஞ்ஞன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here