நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலைகளும் எகிறியுள்ளன.நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது என்று பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் பழங்களின் விளைச்சல் குறைவடைந்துள்ளது. அத்துடன், இறக்குமதிச் செலவும் அதிகரித்துள்ளது. விலை அதிகரிப்புக்கு இதுவே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஒரு கிலோ நெல்லியின் 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 2,500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது . அத்துடன் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட ஏனைய பழங்களின் விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
நானுஓயா நிருபர்