பாகிஸ்தானில் வழமைப்போன்று இவ்வருடமும் ஜூலை மாதத்தில் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது.பாகிஸ்தானில் பெய்துவரும் தொடர் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 76 பேர் உயிரிழந்துள்ளதுடன் 133 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாகவே பெய்துவரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேர தரவுகளின்படி தொடர் மழையினால் உயிரிழந்தவர்களில் 15 பேர் பெண்களும் 31 பேர் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் மழை வெள்ளத்திற்கு பஞ்சாப் நகரமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இங்கு இதுவரையில் 48 பேர் தொடர் மழைக்கு பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 78 வீடுகள் முற்றாக சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறுகிய காலத்தில் அளவுக்கதிகமான மழையைக் கடந்த 30 ஆண்டுகளில் இதுவரையில் கண்டதில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.