பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 6 பேர் பலி : 50 பேர் படுகாயம்

0
214

பாகிஸ்தானில் மதம் சார்ந்த கூட்டத்திற்குச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் மேரியமாபாத்தில் பிரபல தேசிய மரியன்னை கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.இங்கு நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டத்திற்கு பேருந்து ஒன்றில் ஏராளமானோர் சென்ற நிலையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

அளவுக்கு அதிகமானோர் பேருந்தில் பயணம் செய்ததும், வளைவான பகுதியில் சாரதி வேகமாக சென்றதும் விபத்து ஏற்ப்படுவதற்கான காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஐந்து பேரின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here