பாடசாலை கல்வியில் மாற்றம்

0
103

கல்விச் சீர்திருத்தங்களின் பிரகாரம் அனைத்துப் பாடசாலைகளையும் மாகாண சபைகளின் கீழ் இயங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்விக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என இருவகையான பாடசாலைகள் இனி பேணப்படாமல், கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகளின் மேற்பார்வை மற்றும் நிர்வாகம் மாகாண சபைகளுக்கு மாற்றப்படும் வகையில் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

மாகாணசபையிலிருந்து மாகாணசபைக்கு மாறாத நிர்வாக முறைமையின் கீழ் அனைத்துப் பாடசாலைகளும் நடத்தப்பட வேண்டும் என குழு தீர்மானித்துள்ளதாகவும் உறுப்பினர் கூறுகிறார்.பணம் உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்போது அநீதி இழைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஆரம்ப தரம், 6 முதல் 9ம் தரம் மற்றும் உயர்தரம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பாடசாலைகளை நடத்துவதற்கும், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், உயர்தரம் 12ஆம் தரத்துக்கும், சாதாரண தரம் 10ம் தரத்துக்கும் கொண்டு வரப்பட்டு, ஒரு பிரதான பாடசாலையைச் சுற்றி அமைந்துள்ள 08 பாடசாலைகள் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.இதற்கு மேலதிகமாக, தரம் 6 முதல் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக தலைவர் கூறுகிறார்.

முதலாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கு முதலில் முன்மொழியப்பட்டதாகவும், அவ்வாறு செய்தால் தாய்மொழி மாணவர்களிடம் இருந்து அந்நியப்பட வாய்ப்புள்ளதாகவும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here