பாடசாலை நேரத்தில் திரைப்படம் பார்க்க அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள்!

0
172

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை மாணவர்களை படம் பார்க்க திரையரங்கத்திற்கு, தனியார் கல்வி நிறுவனமொன்று அழைத்து சென்றமை குறித்து வட மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
மாணவர்களிடம் பணம் அறவீடு

குறித்த தனியார் நிறுவனம் இதற்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக ஒரு மாணவரிடமிருந்து 1500 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

வார இறுதி நாட்களில் தனியார் கல்வி நிறுவனச் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவே, இவ்வாறு பாடசாலை நாளில் மாணவர்களைத் திரையரங்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here