அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை 40 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக, பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டீசல் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .