பாடசாலை மாணவர்களின் புத்தகப்பை எடையை குறைக்க நடவடிக்கை

0
125

மாணவர்களின் பாடசாலை புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை அவர் ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, பாடசாலை புத்தகங்களை மூன்று பாகங்களாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடையை மூன்றில் இரண்டாக குறைக்கப்படுமென சுசில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்தோடு கல்விச் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படுமென்றும் அப்போது தனியார் வகுப்புகளில் பங்கேற்பது குறையும் என்றும் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here