பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

0
84

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) தீர்மானித்துள்ளது.எதிர்வரும் 14 ஆம் திகதி நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12ஆம் திகதி பாடசாலை நேரத்துக்குப் பிறகு அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் நவம்பர் 18ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here