பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் முன்வைக்கப்பட்ட கூட்டு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பது நாளை (12) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இந்த பிரேரணையை நாளை பிற்பகல் சபாநாயகர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி முன்பே கூறியிருந்தது.
ஆனால், சபாநாயகர் இன்று பொலன்னறுவை பகுதியில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதால், பிரேரணையை சமர்ப்பிப்பது நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.