சந்தையில் சகல மரக்கறிகளினதும் ஒரு கிலோகிராம் 400 ரூபாவிற்கும் அதிகமாக பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவை கடந்துள்ளது.
அதன்படி, கரட், பீட்ரூட், போஞ்சி, உருளை கிழக்கு, கோவா மற்றும் தக்காளி உள்ளிட்டவற்றின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளது.
எதிர்வரும் சில மாதங்களில் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும், என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.