நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா, இன்ஜஸ்றி பீரட் தோட்டப்பிரிவில் 03ஆம் இலக்க தேயிலை தோட்டத்தில் , கொழுந்து கொய்துகொண்டிருந்த இரு பெண் தொழிலாளர்கள் மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் காயமடைந்த அவர்கள் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வனர்த்தம் இன்று12.2023 வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பகுதியில் இருந்து டிக்கோயா இன்ஜஸ்றி பீரட் தோட்ட பகுதிக்கு தொழிலுக்கு 15 தொழிலாளர்கள் வருகை தந்து தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே மரம் அடியோடு சாய்ந்துள்ளது. அப்பகுதியில் கடும் காற்றுடனான காலநிலை நிலவுகின்றது.
காயங்களுக்கு உள்ளான இரண்டு பெண் தொழிலாளர்களும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சதீஸ்