அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாரியளவான அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் முதற்கட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவை மையமாகக் கொண்ட வடக்கு மாகாணத்தின் புதிய தெங்கு முக்கோண வலையத்தின் அபிவிருத்தி பணிகளை எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த ஆண்டுக்கான குறிப்பாக மக்களுக்காக பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் தொடங்கும்.
யாழ்ப்பாணத்தின் மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றை ஆரம்பிப்பது மற்றும் யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் கடவுச்சீட்டை பெறுவதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டனர்.
அதைத் தீர்த்து, இணையவழியில் அந்த வசதியை வழங்க நாங்கள் எதி்ர்பார்க்கின்றோம். மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.