நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்புலா பகுதியில் மூவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.நுவரெலியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையால் கெட்டபுலா அக்கரவத்தை பகுதியிலிருந்து புதுகாடு பகுதியை நோக்கி செல்லும் போது இடையில் பாலத்தில் அதிக நீர் வழிந்தோடியதால் பாலத்தை கடக்க முயன்ற மூவரே இவ்வாறு அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திரமோகன்,இரண்டு பிள்ளைகளின் தாயான ஜெயலட்சுமி, மூன்று பிள்ளைகளின் தந்தையான சத்தியசீலன் ஆகியோரே இவ்வாறு நீரில் மாயமாகியுள்ளனர்.இது தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிசார் மற்றும் கிராம சேவகர் ஆகியோர் மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு தோட்ட பொதுமக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்




