பாலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும்

0
173

பாலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை காணும்போது கவலையளிக்கின்றது எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தூதரகத்துக்கு சென்றிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட் ஐ சந்தித்து கலந்துரையாடினார்.

அமைச்சருடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பிரதி தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.இராஜதுரை ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

தற்போதைய நிலவரம் பற்றி கேட்டறிந்தார். அத்துடன் போரால் உயிரிழந்த மக்களுக்கு தமது அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளார்.

பாலஸ்தீன விவகாரத்தில் இலங்கை மக்கள் உள்ள நிலைப்பாட்டிலேயே தானும் இருப்பதாகவும், எந்தவொரு பிரச்சினைக்கும் போர் தீர்வல்ல எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here