பிக்பாக்கெட் அரசியலை நிறுத்துக – சஜித் வலியுறுத்தல்!

0
56

தற்போதைய அரசாங்கம் அரசியல் பிக்பாக்கெட் கொள்கையையே முன்னெடுத்து வருகிறது. நாட்டின் மக்களிடமிருந்து, வறிய மக்களிடமிருந்து, நிலக்கரியிலிருந்து, மின்சாரக் கட்டணத்திலிருந்து கூட பிக்பாக்கெட் அடித்துக்கொண்டு செல்கிறது. இன்று வரை இலங்கை மதிப்பீட்டாளர்கள் நிறுவனத்திற்கு சொந்தமான மதிப்பீடு என்ற தொழிலுக்கு கூட பிக்பாக்கெட் அடிக்கும் சட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைப்பது வெட்கக்கேடானது என்றும், இந்த பிக்பாக்கெட் அரசியலுக்கு ஆயுள் குறைவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என்றும், இப்போதாவது பிக்பாக்கெட் அரசியலை முன்னெடுக்காமல், பொய்யினாலும் மோசடியினாலும் ஏமாற்றத்தினாலும் நாட்டை ஆளுவதற்கு பதிலாக நாட்டுக்கு மக்களுக்கு வாக்குறுதி அளித்ததை செயல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩முதியோர்களுக்கான 15% வட்டி வருமானமும் இன்று இல்லை.

24 மணி நேரமும் அரசாங்கம் பொய், ஏமாற்றம், வஞ்சகம் மூலம் தங்களின் தோல்வியுற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் தருணத்தில் இன்று இலட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள், முதியோர் நிராதரவாக உள்ளனர். அன்று ரூபா 15 இலட்சம் வைப்புத்தொகைக்கு 15% விசேட வட்டி வருமானம் கிடைத்தது. தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து, இந்த முதியோர் தலைமுறையை பாதுகாப்போம் என்று கூறியிருந்தாலும், இந்த 15% வட்டி விகிதத்தை இன்று 7% ஆக குறைத்துள்ளது. இதனால் முதியோர்களை பாரிய அசௌகரியத்திற்கு ஆளாக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩நாட்டை காப்பாற்றிய வீரர்களையும் இந்த அரசாங்கம் ஏமாற்றியது

அதேபோல் நாட்டை பாதுகாத்துக்கொண்டிருக்கும் வீர போராளிகளுக்கு, முப்படைகளுக்கு, பொலிசாருக்கு, சிவில் பாதுகாப்பு துறைக்கு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை இந்த அரசாங்கம் வெட்டைச் செய்துள்ளது. அங்கவீனமுற்ற வீரர்களுக்கு வாக்குறுதி அளித்த சலுகைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தமது தொகுதிகளில் பணியாற்றிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தூர மாகாணங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம் முதியவர்களையும் பாதுகாப்பு பிரிவுகளையும் ஏமாற்றியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அமெரிக்க தீர்வை வரியை குறைத்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எந்த விருப்பமும் இல்லை.

ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இந்தியாவும் இடையே ஏற்படுத்திக்கொண்ட வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் தீர்வை வரி விகிதம் 50% இலிருந்து 18% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இலங்கைக்கு கூட 20% தீர்வை வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அமெரிக்க ஏற்றுமதி இலக்குகள் மீதான போட்டித்தன்மை குறித்து கடுமையான பிரச்சினைகள் எழுகின்றன. அமெரிக்கா வங்காளதேசத்திற்கு வழங்கும் தீர்வை வரியை எந்த வகையிலாவது 18% க்கு குறைத்தால் அதனால் ஏற்படும் தாக்கத்தை கற்பனை செய்ய முடியாதுள்ளது. இது குறித்து அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நிலக்கரியிலும் இந்த அரசாங்கம் பெரும் மோசடியை செய்துள்ளது.

பொய் சொல்லி தனது இருப்பை தொடரும் அரசாங்கம் இப்போது நிலக்கரியிலும் பெரும் மோசடி செய்துள்ளது. இவர்கள் நிலக்கரியில் கமிஷன் அடிக்கும் போது வீதி விளக்குகளின் கட்டணத்தையும் மக்கள் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு முன்பு இந்த வீதி விளக்கு கட்டணத்தை செலுத்தியது உள்ளூராட்சி மன்றங்களே தவிர மக்கள் அல்ல என்றும், இப்போது வீதி விளக்குகளுக்கான கட்டணத்தையும் மக்கள் மீது சுமத்தியது IMF நிபந்தனைகளின் அடிப்படையிலா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

🟩 இந்த அரசாங்கம் IMF இன் அடிமை.

IMF இலிருந்து வழங்குவதாக கூறப்பட்ட அடுத்த கட்ட தவணை இன்னும் கிடைக்கவில்லை. இப்போது IMF தூதுக்குழு இலங்கைக்கு வந்தாலும் இந்த தவணை குறித்த எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. இந்த தவணை கிடைக்காதது IMF அறிவுரையின்படி மின்சார கட்டணத்தை 11.57% ஆல் அதிகரிக்காமல் விட்டதனால் தானா என்ற பிரச்சினை காணப்படுகின்றது. IMF ஒப்பந்தத்தை மாற்றுவதாக கூறி இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும், இந்த அரசாங்கம் இன்று IMF இன் அடிமைகளாகவே மாறியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 புத்த சாசனத்திற்கும் மகா சங்கரத்தினத்திற்கும் அவமதிப்பைச் செய்யாதீர்கள்.

அதேபோல் சம்புத்த சாசனத்தை அவமதித்து மகா சங்கரத்தினத்தை அவமதித்து மகா சங்கரத்தினரை கேடுகெட்டவன் என்று விளக்கும் அரசாங்கமே இன்று அமைந்து காணப்படுகின்றது. இப்போதாவது சம்புத்த சாசனத்துடன் இவ்வாறான விளையாட்டுக்களை செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இப்போதாவது அரசாங்கம் அரசியலமைப்பை வாசித்து சம்புத்த சாசனத்திற்கும் வழங்கப்பட்டுள்ள ஸ்தானத்தை தேடிப்பார்க்குமாறும், இனவாதம் மதவாதத்தை தூண்டி இந்த ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here