பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

0
89

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரகேவின் பிணை மனுவை நிராகரித்த கம்பஹா உயர் நீதிமன்றம், அவரை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

போலி பத்திரங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததாக பிரசன்ன ரணவீர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவரது எதிர்பார்க்கப்பட்ட பிணை உத்தரவும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here