நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை தோட்டப்பகுதியில் பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஸ்கூட்டி மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைமந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.10.06.2018 அன்று காலை 9 மணியளவில் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. எனினும் குறித்த மண்சரிவை அகற்றாததன் காரணமாக மதியம் 1.30 மணியளவில் அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற குறித்த மோட்டர் சைக்கிள் மண்சரிவினால் வீதியில் காணப்பட்ட மண்மேட்டில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த மோட்டர் சைக்கிளை செலுத்திய ஓட்டுனர் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண்சரிவை அகற்றுவதற்கும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தலவாக்கலை பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)