பிரபல பாப் பாடகர் ஆரோன் கார்ட்டர் மர்ம மரணம்! – அமெரிக்காவில் அதிர்ச்சி!

0
193

அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகரான ஆரோன் கார்ட்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பிரபலமான பாப் இசைக் குழுக்களில் முக்கியமானது பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ். இந்த குழுவில் முக்கியமான உறுப்பினராக இருந்தவர் பாப் இசை பாடகர் ஆரோன் கார்ட்டர். பின்னர் அந்த குழுவிலிருந்து விலகிய ஆரோன் பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.ஆரோனுக்கு முதலில் மெலான் மார்ட்டின் என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. சில ஆண்டுகள் முன்னதாக போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆரோன் மற்றும் அவரது மனைவி அவர்களது குழந்தையை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து சில காலமாக ஆரோன் மனநல பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள விஸ்டா டிரைவ் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஆரோன் கார்ட்டர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இசை ரசிகர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here