முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு கொழும்பு விஜேராமவில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வௌியேறிச் செல்வதாக அவரது பிரத்தியேக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
சிங்கம் காட்டிலிருந்துதாலும் வீட்டிலிருந்தாலும் சிங்கம் தான் என்று கூறிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நாட்டிலிருந்து வௌியேறினாலும், ஒரு வார காலத்தின் பின்பே அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்.
எவ்வாறாயினும் பெற்றத்தாய்கும் நன்றிக் கடன் இல்லாதவர்கள் ஆட்சி செய்யும் தருணத்தில் இவ்வாறான விடயங்கள் நடப்பது சாதாரணமானது என்று கூறிய அவர், புலம் பெயர் அமைப்புக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் இது மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறினார்.
மேலும், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரம் உயிரோடு இருந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்றும் கூறினார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்தச் செயல்பாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பை கேள்விக்குரியாக்கியுள்ளது என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
behindmenews.com