பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது.
இதனால், விமானம், பேருந்து, புகையிரத சேவைகளும் முடங்கின.
பிரதான சாலைகள் மற்றும் பல்வேறு சுரங்க பாதைகளும் மூடப்பட்டு உள்ளன.
பிரான்சின் 2ஆவது மிக பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லே விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, பிரான்சின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூஸ் ஆகிய 3 தெற்கு பகுதி நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
அந்த நகரத்தின் மேயர் பென்வாயிட் பாயன் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுள்ளதுடன், தொடர்ந்து வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொண்டார்.