பிரான்ஸ் வரலாற்றில் இடம் பிடித்த இலங்கை தமிழன் – இந்த ஆண்டின் படைத்த சாதனை!

0
169

பிரான்ஸில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரெஞ்சுப் பாண் (baguette) தயாரிக்கும் போட்டியில் இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.

உலகின் மிக பிரபல உணவுகளில் ஒன்றான பிரெஞ்சுப் பாண் உள்ளது. இந்தப் போட்டியில், வெற்றியாளராக தர்ஷன் செல்வராஜா (37) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட தர்ஷன் பாரிஸில் வாழ்ந்து வருகிறார். அங்குள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பிரெஞ்சு பாரம்பரிய சுவையான பாண் தயாரித்து இவ்வாண்டுக்கான வெற்றியாளராக மாறியுள்ளார்.126 போட்டியாளர்களில் தர்ஷன் செல்வராஜா வெற்றிபெற்றுள்ளார். வெற்றிப் பரிசாக 4000 யூரோ வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, பிரான்ஸின் அதிபர் மாளிகையான எலிசேக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பாண் வழங்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “இலங்கையில் நான் இளமையாக இருந்தபோது பிரான்ஸ் அதிபருக்கு பாண் வழங்குவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here