பிரித்தானியா முழுவதும் பலத்த காற்று

0
49

பிரித்தானியா முழுவதும்  ஆர்க்டிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் மேற்கு பகுதியில், வேல்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திலிருந்து மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மீள்வதற்காக உதவி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் உயர்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பனிப்பொழிவு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாடியா புயல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிக்கு கடந்த மாதங்களாக மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்திய பின்னர் தற்போது வரை குளிரான காலநிலை நிலவுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here