பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் “ரெட் கமாண்ட்” என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக பொலிஸார் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடி ஆபரேஷன் மேற்கொண்டது.
ரியோ டி ஜெனிரோ நகரில் கோம்ப்லெக்ஸோ டி அலேமாவோ மற்றும் பென்ஹா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் 2,500 பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் கும்பல் மீது ஹெலிகொப்படர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு ஒபரேஷனில் நான்கு பொலிஸார் உட்பட 119 பேர் உயிரிழநதனர் என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையே இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளன.
இந்தத் ஒபரேஷன், அடுத்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் சி40 சர்வதேச மேயர்கள் மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
		
