பிரேசிலில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது 44.7 டிகிரி செல்சியஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை காரணமாக ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பிரேசில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த வெப்பநிலையை தாங்க முடியாமல் 23 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு அரைக்கோளத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன், பிரேசிலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.