பிரேசில் நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 200 கோடி ரூபா கொக்கெய்ன்! பொறிக்கப்பட்டிருந்த மர்ம சின்னத்தால் குழப்பம்!

0
163

பிரேசில் நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

சீனி கொள்கலனில் மறைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட 200 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்ன் தொகை நேற்று சட்ட விரோத பொருள் தடுப்பு பிரிவினால் மீட்கப்பட்டன.

இந்த கொக்கெய்ன் பொதிகளில் மர்மமான சிங்க இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

பிரேசில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த கொக்கெய்ன் தொகையின் அனைத்து பகுதிகளிலும் இந்த சிங்க இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வெலே சுதாவின் போதைப்பொருள்களை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் அவரது தனிப்பட்ட இலட்சினை ஒன்று பொறிக்கப்பட்டிருந்ததனை காண முடிந்துள்ளன.

அதனை அறிந்த நபர்கள் அது வெலே சுதாவின் போதைப்பொருள் என அடையாளம் காண முடியும்.

இந்த கொக்கெய்ன் தொகையினை கொண்டு வந்த வர்த்தகர் கிட்டத்தட்ட 40 வருடங்களாக இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்வதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here