பிலிப்பைன்சுக்கு சீனா எச்சரிக்கை

0
40

தென்சீன கடல் பகுதியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து , பிலிப்பைன்சுக்கு சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்சீன கடல் பகுதியில் உள்ள ஸ்கார்பாரோ ஷோல் எனப்படும் சர்ச்சைக்குரிய தீவில் ‘தேசிய இயற்கை பாதுகாப்பு பகுதி’யை அமைக்கப் போவதாக சீனா சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதற்கு, ‘சீனா இத்தீவை ஆக்கிரமிப்பதற்கான ஒரு சதி திட்டம் இது’ என பிலிப்பைன்ஸ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இத்தீவு பிலிப்பைன்ஸ் மீனவர்களின் முக்கியமான மீன்பிடி பகுதி என்பதால், இரு நாடுகளுக்கிடையே மோதல் ஏற்படுத்தும் பகுதியாக உள்ளது.

இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தன் உறவை பிலிப்பைன்ஸ் வலுப்படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக இந்நாடுகளுடன் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சிகளை பிலிப்பைன்ஸ் அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தெற்கு பிராந்திய படைப்பிரிவின் செய்தி தொடர்பாளர் தியான் ஜூன்லி, பிலிப்பைன்சுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.

”தென்சீன கடல் பகுதியில், ஆத்திரமூட்டும் சம்பவங்கள் மற்றும் தொடர்ந்து பதற்றத்தை அதிகரிக்கும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்துமாறு பிலிப்பைன்ஸை நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம். வெளிநாட்டு சக்திகளை கொண்டு வருவது வீணான முயற்சி,” என, அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here