புதிய சின்னத்தில் களமிறங்கும் ரணில்!

0
136

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு தவிர்ந்த புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பேராசிரியருமான ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக, பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

ஜனாதிபதி தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிப்பதில் அவர் உட்பட பலருக்குப் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூறியுள்ளனர்.

அவர் மொட்டுக் கட்சியின் கீழ் போட்டியிடுவது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள எமக்கும் பிரச்சினை உள்ளது.

எனவே ரணில் விக்ரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பேராசிரியருமான ஆஷு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here