புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

0
151

நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க துரிதமாக செயற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்ற இரண்டு மாதக்காலங்களில் நாட்டில் பொருளாதார பிரச்சினையை சீர்செய்வதற்காக வெளிநாட்டு உதவிகளை பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சி என்ற அடிப்படையில் இறுதி தருணம் வரை பலகோணங்களில் கலந்துரையாடல் நடத்தியே யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக முழுமையாக ஆராய்து இ.தொ.கா முடிவெடுத்தது.

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் மற்றும் சர்வதேச நட்புறவை கொண்ட நபர் யார் என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இ.தொ.கா மக்களின் நலன்களை ஆராய்ந்து அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில்தான் எப்போதும் தீர்மானம் எடுத்துவருகிறது. அதன் அடிப்படையில் தான் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவளித்துள்ளோம். நாட்டை மீட்டெடுக்க அவர் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம். புதிய ஜனாதிபதியின் பயணம் வெற்றிபெற இ.தொ.கா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here