புரவுன்சீக் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்..!

0
216

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள புரவுன்சீக் தோட்ட 7 பிரிவில் உள்ள தொழிலாளர்கள் புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலை முன் ஆர்ப்பாட்டம்.
ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட 7 பிரிவில் உள்ள தொழிலாளர்கள் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலை முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

சுமார் 600 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இப் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.ஆர்பாட்ட காரர்கள் தங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு படி வேதனம் வழங்க வேண்டும் எனவும் மேலதிகமாக தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலையில் சகல பொருட்களும் விலை அதிகரித்தால் எம்மால் உயிருடன் வாழமுடியாது உள்ளது.

நாள் ஒன்றுக்கு எமக்கு 2500/= வேதனம் வழங்க வேண்டும் எனவும் இல்லாவிடின் எம்மால் தோட்டத்தில் பணியில் ஈடுபட முடியாது காரணம் அன்றாட வாழ்க்கை செலவு உயர்ந்த நிலையில் உள்ளது.
நாளாந்தம் பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது.பாடசாலைக்கு பிள்ளைகள் செல்ல வேண்டும்.நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய வேண்டும்.இதன் செலவுகள் அதிகரித்துள்ளது.

தேயிலை செடிகளில் கொழுந்து இல்லை .உரம் மற்றும் புள் வெட்டுவது இல்லை.இதனால் நாளாந்தம் 30 கிலோ பரிக்க முடியாத நிலையில் உள்ளது.நாளாந்த வேதனத்தை பெற்று கொள்ள 20 கிலோ பச்சை கொழுந்து பரித்து கொண்டு அதற்கு மேலாக தராசு எடை என மூன்று நேர நிறுவையின் போது 9 கிலோ தனியாக பரிக்கவேண்டியுள்ளது என கூறி.இவ்வாறு பரிக்கும் எமக்கு நீதிமன்ற உத்தரவை மீறி வேதனம் குறைத்து வழங்க வேண்டாம் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இறுதியில் தொழிலாளர்கள் தங்களது பணிக்கு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here