நடிகை மீனாவின் கணவர் புறா எச்சத்தில் இருந்து பரவிய தொற்றுகளினால் நுரையீரல் பாதிக்கபட்டு உயிரிழந்திருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றே.
பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் புறாக்களின் தொல்லையால் பிராமணமங்கலம் பகுதியில் வசித்து வந்த தம்பதிகள் பிரிந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த பிராமணமங்கலம் கிராமத்தில் சதீஷ்குமார் அவரின் குடும்பதினருடன் வசித்து வந்துள்ளார்.அவரது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார்.
அந்தப் புறாக்கள் எச்சம் கழிப்பதால் சதீஷ்குமாரின் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் புறாக்களை மூடி வைக்குமாறு சதீஷ்குமார் கூறியுள்ளார். எனினும், பக்கத்து வீட்டார் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.அடிக்கடிக்கடி புறா எச்சம் கழிப்பதை சுத்தம் செய்யும் சதீஷ்குமாருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இறுதியில் இதனால் நோய் தொற்று ஏற்படும் என பயந்து என் சதீஷ்குமாரின் மனைவி குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான, சதீஷ்குமார் வேலூர் பொலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நடிகை மீனாவின் கணவர் புறா எச்சத்தில் இருந்து பரவி தொற்றுகளினால் நுரையீரல் பாதிக்கபட்டு உயிரிழந்திருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றே.
இந்நிலையில் இது போன்ற இழப்பு ஏற்படாமல் இருக்க சதீஷ்குமார் என்ற குடும்பத்தினருக்கு தீர்வு பெற்று கொடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.