புஸ்ஸல்லாவையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில்

0
102

கண்டி – புஸ்ஸல்லாவை, போமண்ட் தோட்டத்தில், சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, வீடு திரும்பும் போதே, அவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தநிலையில் அவர்கள் அனைவரும், கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், 07 பெண்கள் அடங்களாக 17 முதல் 70 வயதுக்குட்பட்ட 09 பேரும், 06 முதல் 14 வயது உட்பட்ட 04 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here