பூண்டுலோயா மிருக வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா!!

0
155

கடந்த 40 வருடங்களாக மிகவும் சிறிய அறையிலே இயங்கி வந்த பூண்டுலோயா மிருக வைத்தியசாலை காரியாலயத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மத்திய மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு வைபவ ரீதியாக 10.05.2018 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.கடந்த 10 வருடங்களாக. புதிய ஒரு கட்டிடத்தை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பல சிக்கல்களின் காரணமாகவும் வளப் பற்றாக்குறை காரணமாகவும் நடைபெறாமல் இருந்தது

இதனையடுத்து அமைச்சர் ராமேஸ்வரன் அவர்களின் முனைப்பான செயலின் ஊடாக 230 லட்சம் ரூபா செலவிலேயே இந்த புதிய கட்டிடத்தை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு 10.05.2018 அன்று புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG-20180511-WA0006-800x533

இந் நிகழ்வில் கொத்மலை பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், மாகாண. பணிப்பாளர்கள், மிருக வைத்தியர்கள், அமைச்சின் அதிகாரிகள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

 

க.கிஷாந்தன், பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here