கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா ஹெரோ கீழ்ப்பிரிவில் அமைக்கப்படும் கட்டிடத்திற்கும் ஊர் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கடைத்தொகுதியை ஊர் பொதுமக்களுக்கே பிரித்து கொடுக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் (12/08/2024) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த கட்டிடம் அமையப்பெற்றால் ஊர் பொது மயானம்,ஊருக்கு செல்லும் பிரதான பாதை, ஊர் விளையாட்டு மைதானம் அத்தனையும் இழக்க நேரிடுவதாக ஊர் மக்கள் தெரிவித்தே பதாதைகளை ஏந்தியும் ,கோஷங்களை எழுப்பியும் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாதென தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.