பூண்டுலோயாவில் மோட்டர் சைக்கிள் – லொறி விபத்து – மூவர் படுகாயம்!

0
149

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூண்டுலோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் 19.03.2018 அன்று காலை 06 மணியளவில் சிறிய ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும் பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றும் பூண்டுலோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சாரதியும், அவருடன் பயணித்த மற்றுமொருவரும், லொறியின் சாரதியும் இவ்வாறு கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், மோட்டர் சைக்களின் சாரதி மோட்டர்சைக்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

20180319_062136 DSC04034

பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here