பூமிக்கு வருகிறது புதிய ஆபத்து – வெளியாகிய எச்சரிக்கை..!

0
168

பூமியில் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ விளைவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த நிலைமை வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டி எல் நினோ உருவாகி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது இயல்பை விட வலுவாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

இது அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் உலக சராசரி வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here