ஜெர்மனியில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே உணவு விடுதிகளிலும், மதுபான நிலையங்களிலும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு ஆலோசகர் ஓலாப் ஸ்கால்ஸ் அறிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி பொட்டுக்கொண்டவர்கள், நோய்தொற்றால் பாதிக்கபட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தாலும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள், 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும் என்றும் 6ஆம் நாள் கட்டாய முகக்கவசம் மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாடசாலைகளுக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.