பெண்ணாக ஏன் பிறந்தேன் என யோசித்தேன்! சந்தித்த மோசமான ஆண்கள்: நடிகை சரண்யா நாக் வேதனை என் தாய் வாழ்க்கையே அப்படி தான் இருந்தது.
2004ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “காதல்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா நாக்.
பின்னர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பேராண்மை, ரெட்டை வாலு போன்ற பல படங்களில் நடித்தார்.ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து சரண்யா ஒதுங்கினார்.
அண்மையில் அவர் தனது குழந்தை பருவத்தில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.அவர் கூறுகையில், தந்தை இல்லாமல் தாயாரின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன்.குழந்தை பருவத்தில் பலமுறை அக்கம் பக்கத்தில் உள்ள சிலர் மூலம் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்தேன்.
அந்த வயதில் அதை தடுக்கும் தைரியம் எனக்கு இல்லை, இது குறித்து அம்மாவிடமும் போய் சொல்லமுடியாது.ஏனெனில், என் தாய் வாழ்க்கையே அப்படி தான் இருந்தது.
ஏன் தான் பெண்ணாக பிறந்தோம் என பலமுறை யோசித்திருக்கிறேன், அப்படிப்பட்ட மோசமான ஆண்களை வாழ்வில் சந்தித்தேன் என கூறியுள்ளார்.