மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை வழியுருத்தி மலையகம் எங்கும் இலங்கை தொழிலாளர் காங்ரசினால் முன்னெடுக்கபடும் பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு இலங்கை தொழில் சங்கங்களுக்கான மத்திய நிலையம் தமது ஆதரவை வழங்கவதாக தெரிவித்துள்ளது.
07.12.2018.வெள்ளிகிழமை இன்று இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும்
முன்னால் அமைச்சருமான ஆறுமுகன் தொண்மான் அவர்களுக்கு எழுத்து மூலமாக இக்
கடிதத்தினை அந்த நிலையம் அனுப்பிவைத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
தெரிவித்துள்ளது
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவினை
வழியுருத்தி இன்று மலையகம் எங்கும் பணிபுறக்கணிப்பும் ஆர்பாட்டங்களும்
இடம் பெற்றுவருகின்றன.
ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் நான்கு சுற்று பேச்சிவார்தை இடம் பெற்று போதிலும் தோட்ட தொழிலாளர்களுக்கு 100ரூபா மாத்திரம் சம்பளத்தில் அதிகரிக்கபட்டுள்ளது.
ஆகவே இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவினை வழியுருத்தி முன்னெடுக்கபடுகின்ற போராட்டத்திற்கு தாம் முழுமையான ஆதவை வழங்க போவதாக இலங்கை தொழில் சங்கங்களுக்கான மத்திய
நிலையத்தின் செயலாளர் சிசிர ஜெயகொடி அவர்களால் அனுப்பிவைத்துள்ள
கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)