பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன விடயத்தில் தங்களது நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை- பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவிப்பு!!

0
183

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன விடயம் தொடர்பில் தங்களது நிலைபாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை என பெருந்தோட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது என பெருந்தோட்ட நிறுவனத்தின் பேச்சாளரும் அதன் தலைவருமான ரொஷான் இராஜதுறை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாரு

தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவினை வழங்குமாறு கோரி கூட்ட ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்று
பேச்சிவார்த்தைகளை மேற்கொண்டு வந்த போதிலும் அடிப்படை வேதனமாக 600ரூபா மாத்திரமே வழங்க முடியும் என எற்கனவே அறிவிக்கபட்டுள்ளது எனயும் இந்த நிலைபாட்டில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஊறுதியாக இருப்பதாகவும் அவர்
மேலும் தெரிவித்தார்

இது தொடர்பில் 16.12.2018.ஞாயிற்று கிழமை முதலாளி சம்மேளனத்தின் உறுப்பு நிறுவனங்களுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் குறிப்பிட்டார் இதேவேலை கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன விடயம் தொடர்பிலான பேச்சிவார்த்தையில் முன்னேற்றம் காணபட்டுள்ளதாக இலங்கை
தொழிலாளர் காங்ரசின் உபதலைவர் எஸ்.அருள்சாமி அறிவித்து இருந்தார்

இதேவேலை தொழிலாளர்களின் வேதன விடயத்தில் முன்னேற்றம் காணபட்டுள்ளதை அடுத்து இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்தியா சென்றுள்ளதாகவும் நாடு திரும்பியவுடன் குறித்த வேதனம் தொடர்பில்
கலந்துரையாடபட்டு இதற்கொரு தீர்மானம் எட்டபடும் எனவும் தெரிவிக்கபட்டது.

அதன் அடிப்படையில் 18.12.2018 செவ்வாய்கிழமை இலங்கை தொழிலாளர் காங்ரஸ் வேதனவிடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு 19.12.2018.புதன் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களோடு பேச்சிவார்ததை ஒன்றை நடத்தவிருக்கும் நிலையில் எவ்வாறான விடயங்களை ஜனாதிபதியிடம்
முன்வைக்கலாம் என்பது குறித்து இன்று ஆராயபடவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸ் மேலும் தெரிவித்தது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here