நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார சூழ்நிலையை பயன்படுத்தி அதை அரசியலாக்கி மக்களை பகடைகாய்களாக மாற்றி அரசியல் லாபம் தேட தமிழ் முற்போக்கு கூட்டணியினர் முயற்சித்து வருவதாக இ.தொ.காவின் உபத்தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக முழு நாட்டு மக்களும் இன,மத,கட்சி பேதமின்றி அரசுக்கெதிராகவும்,அரசாங்கத்திற்கெதிராகவும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.நாடுதழுவிய ரீதியில் போராட்டங்களும் வெடித்து வருகின்றது.இந்நிலையில் இப்பொருளாதார சிக்கலால் பெரிதும் மேலும் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்ற எம் பெருந்தோட்ட மக்களின் உயிரோட்டமான போராட்டத்தை வெறும் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தி அதில் அரசியல் பிழைப்பு நடத்துகின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி.
தலவாக்கலையில் இடம்பெற்ற போராட்டம் மக்களின் போராட்டமாக இருந்துருக்க வேண்டும்.அதற்காகவே மக்கள் தங்கள் கட்சி பேதங்களை மறந்து ஒன்று கூடினர் ஆனால் அவர்களை தலவாக்கலை நகரிலிருந்து மைதானத்திற்கு அழைத்து அங்கே எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் தமிழ் முற்போக்கு கூட்டணியினரும் பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளாராக மாற்றுவோம் என அரசியல் மேடையில் பேசுவதை பேசியுள்ளனர்.அது மட்டுமல்ல த.மு.கூ கூட்டமெனவும் சஜித்துக்கான அலையெனவும் பிரச்சாரம் பண்ணியுள்ளனர்.இவ்வாறான கீழ்த்தரமான எண்ணங்களை கொண்டவர்களால் தான் பலர் மலையக சமூகத்தை இன்றும் விமர்சித்து வருகின்றனர்.
அது மட்டுமல்ல இ.தொ.காவின் பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமானும் சரி இ.தொ.காவும் சரி அரசாங்கத்தோடு காணப்பட்டது.ஆனால் நாடு காணப்படும் இந்நிலையில் பதவியினை துச்சமென தூக்கியெறிந்து மக்களோடு மக்களாக இன்று இ.தொ.காவும் ஜீவன் தொண்டமானும் நிற்கின்றனர்.ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இச்சூழ்நிலையிலும் அரசியலை பேசுகின்றனர்.
மக்கள் பிரச்சனையை என்று அரசியல் பிரச்சாரமாக மாற்றினார்களோ அன்றே இவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என இ.தொ.கா உபத்தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்தார்.