பெருந்தோட்டப்பகுதி மக்கள் மட்டுமின்றி நகர் மற்றும் கிராமப்பகுதி மக்கள் மத்தியில் ஆன்மீக ஆறிவுகளை வளர்த்தெடுக்கும் வகையில் அவர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இதன்மூலம் தாம் பின்பற்றும் சமயங்களின் பண்பாடுகள் அதன் விழுமியங்களை எதிர்காலத்தில் முறையாக பாதுகாக்க முடியும் என அகில இலங்கை பிரம்ம குமரிகள் அமைப்பின் கண்டி மாவட்ட இணைப்பதிகாரி எஸ். வேலாயுதம் தெரிவித்தார்.
“எல்லைக்குட்பட்ட ஆசைகளை துறப்பதால் நல்லவராக வாழுங்கள் ” எனும் தொணியில் ஆன்மீக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நானுஓயா காந்தி மண்டபத்தில் (27) வெளிக்கிழமை இடம்பெற்றது.
பிரிடோ நிறுவன நிகழ்சி திட்ட இயக்குனர் எஸ்.கே. சந்திரசேகரன் வழிக்காட்டளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த 200க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இதில் மேலும் கருத்துரைத்த அவர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மக்கள் ஆரம்பகாலத்தில் ஆன்மீக ரீதியில் அவர்களின் வாழ்க்கையை வழிநடத்தி வந்தார்கள்.
இதன்போது காலத்தின் நகர்வில் நாகரீகம் வளர்ச்சி அடைய ஆன்மீக வாழ்வின் தரம் மங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது.
இதனால் தாம் போற்றும் சமய அனுஸ்டானங்களின் விழுமியங்களில் மாற்றங்கள் இலக்கப்பட்டுள்ளது.சமயங்களை முறையாக பேணி பாதுகாப்பதை தவறவிடப்பட்டுள்ளது.மனித உயிர்இஉடல்இஉடமைகள் மீது நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதுடன் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நிம்மதி இழந்து வாழும் நிலையும் உருவாகியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை சௌக்கியமற்ற வாழ்வு வாழும் நிலையில் சமூகங்கள் ஒழுங்கற்ற வகையில் முன்நோக்கி செல்லும் நிலமையும் ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டப்பகுதியில் மக்கள் தாம் வழிபடும் தெய்வங்களை முறையாக வணங்கி வழிபடும் தன்மையை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர். திருமணங்கள் இடம்பெறும் வீடுகளில் கூட ஆசிர்வதிப்பதிலும் கூட அங்கு ஆன்மீக அறிவுகளை மக்கள் மறந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலமையை தொடர விடக்கூடாது. மனிதர்களின் எண்ணம்இ அவர்களின் சக்திஇ ஆத்மா இவைகளை இவர்கள் உணரவேண்டும். நல்லதை நினைத்துஇ நல்லதை செயல்படுத்தும் பக்குவ தன்மைக்கு நாம் மாற்றம் பெற வேண்டும் .இதற்கு ஆன்மீக விழிப்புணர்வு அவசியம் என்பது காலத்தின் கட்டாயம் என்பது உணரப்படவேண்டும் என்பதை எமது அமைப்பு இலக்காக கொண்டுள்ளது.
இதற்காகவே மலையக பிரதேசங்களில் ஆன்மீக விழிப்புணர்வு நிகழ்வுகளை பிரிடோ அமைப்பின் ஊடாக முன்னெடுக்கின்றோம்.
இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்தும் ஒவ்வொரு மலையக பிரதேசங்களுக்குக்கும் முன்னெடுத்து செல்லப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை நிருபர்